லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கேர்னல் கடாபியின் மகள் ஆயிஷா கடாபி (Aisha Gaddafi), ஓமானில் இருந்து ஈரான் மக்களுக்கு விடுத்துள்ள ஒரு முக்கிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேற்கத்திய நாடுகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த ஒரு தேசத்தின் வலியை அவர் தனது செய்தியில் பகிர்ந்துள்ளார். மேற்கத்திய நாடுகள் வழங்கிய போலி வாக்குறுதிகளை நம்பியதால் லிபியா இன்று சந்தித்துள்ள பேரழிவை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிட்டால் உலகம் உங்கள் பக்கம் நிற்கும் என என் தந்தையிடம் கூறப்பட்டது. தந்தையின் நம்பிக்கைக்குப் பதிலாக நேட்டோ (NATO) படைகளின் குண்டுகளே பரிசாகக் கிடைத்தன. லிபியா இரத்தத்திலும் வறுமையிலும் மூழ்கடிக்கப்பட்டது. “ஓநாயுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஆட்டை ஒருபோதும் காப்பாற்றாது; அது அடுத்த வேளை உணவிற்கான நேரத்தை மட்டுமே குறிக்கும்.” ஈரான் மக்கள் பொருளாதாரத் தடைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு தங்கள் நாட்டின் கௌரவத்தையும் சுதந்திரத்தையும் காக்க வேண்டும் என அவர் இந்த உருக்கமான கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆயிஷா கடாபி ஒரு வழக்கறிஞர் மற்றும் ஐக்கிய நாடுகளின் முன்னாள் தூதராக இருந்தவர். 2011-ல் லிபியாவில் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்குப் பிறகு, அவர் தனது குடும்பத்துடன் அடைக்கலம் தேடி ஓமான் நாட்டிற்குச் சென்றார். தற்போது அங்கிருந்தே அவர் இந்த முக்கியமான அரசியல் கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார். இந்தச் செய்தி, ஏகாதிபத்திய சக்திகளின் தலையீடுகள் ஒரு நாட்டை எவ்வாறு நிலைகுலையச் செய்யும் என்பதற்கு லிபியாவை ஒரு வரலாற்றுப் பாடமாக முன்வைக்கிறது. ________________________________________
: ஆயிஷா கடாபியின் எச்சரிக்கையும் ஈரானிய மக்களுக்கான செய்தியும்! – Global Tamil News
9