யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறையினா் முன்னெடுத்து வரும் விசேட நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ். நகரை அண்மித்த பகுதியில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், சந்தேக நபர்கள் இருவரிடம் இருந்தும் 03கிராம் 130 மில்லி கிராம் மற்றும் 06 கிராம் 510 மில்லி கிராம் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தப் போதைப்பொருட்களை எங்கிருந்து பெற்றுக்கொண்டனர் மற்றும் யாருக்கு விநியோகிக்கத் திட்டமிட்டனர் என்பது குறித்து காவல்துறையினா் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவர்கள் விரைவில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். Tag Words: #JaffnaPolice #DrugBust #HeroinSeized #CrimeNewsJaffna #NorthernProvince #PoliceIntelligence #SriLankaSafety #ZeroDrugs
🚨 யாழில். போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது – Global Tamil News
7