அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரானுடன் வர்த்தக உறவுகளைப் பேணி வரும் அனைத்து நாடுகளின் பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அன்படி இந்த புதிய வரி விதிப்பானது உடனடியாக நடைமுறைக்கு வரும் என ட்ரம்ப் தனது Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளார். ஈரானில் நடைபெறும் மக்கள் போராட்டங்களை அந்நாட்டு அரசு ஒடுக்குவதைக் கண்டித்தும், போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால் இராணுவ ரீதியாகத் தலையிடப் போவதாகவும் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்த பொருளாதாரத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளான சீனா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இதன் மூலம் நேரடிப் பாதிப்பைச் சந்திக்கக் கூடும். 🇱🇰 இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன? இலங்கையைப் பொறுத்தவரை இந்த அறிவிப்பு கவலைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது: இலங்கை தேயிலையின் மிக முக்கியமான சந்தைகளில் ஒன்றாக ஈரான் திகழ்கிறது. “பண்டமாற்று முறையில்” (Barter System) எரிபொருளுக்காக தேயிலையை வழங்கும் ஒப்பந்தங்களில் ஈரான் ஈடுபட்டுள்ளது. இந்த வர்த்தகத் தொடர்பு காரணமாக இலங்கைப் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்தால், அது நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நெருக்கடிக்குள்ளாக்கும்.இலங்கையின் பிரதான ஏற்றுமதி சந்தை அமெரிக்காவாகும் (குறிப்பாக ஆடைத் தொழில்). ஈரானுடன் வர்த்தகம் செய்வதால் 25% வரி விதிக் கப்பட்டால், இலங்கையின் ஏற்றுமதி வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடையும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதிச் செலவுகள் அதிகரிப்பதால், உள்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. “ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும்போது 25% வரியைச் செலுத்த வேண்டும். இந்த உத்தரவு இறுதியானது,” – டொனால்ட் ட்ரம்ப். சர்வதேச அரசியல் மேடையில் எழுந்துள்ள இந்த விவகாரம், இலங்கையின் பொருளாதார மீட்சியில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலதிக தகவல்களுக்குப் பின்தொடருங்கள்! #Trump #Iran #SriLanka #Economy #TradeWar #LKA #Tax #TruthSocial #InternationalNews #SriLankaNews #EconomyCrisis #TeaTrade #USA
🚨 ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி – இலங்கையின் தேயிலைக்கு என்னவாகும்? – Global Tamil News
7