தமிழ்நாடு டாஸ்மாக் (TASMAC) நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சுமார் ரூ. 1,000 கோடி ஊழல் வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று மிக முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அமலாக்கத்துறை (ED) கடந்த ஆண்டு திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், டாஸ்மாக் மேலாண் இயக்குனர் மற்றும் தொடர்புடைய ஒப்பந்ததாரர்களின் இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையை எதிர்த்தும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்கக் கோரியும் ஆகாஷ் பாஸ்கரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றமும் அவருக்கு ஆதரவாக, ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட்டதோடு, அவர் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடையும் விதித்திருந்தது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் அடங்கிய அமர்வு: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தேவைப்பட்டால், சட்டத்திற்கு உட்பட்டு ஆகாஷ் பாஸ்கரனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் என அனுமதி அளித்தது. சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, டாஸ்மாக் ஊழல் வழக்கில் அடுத்தகட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. #Hashtags: #TASMAC #TASMACScam #AkashBhaskaran #SupremeCourt #EnforcementDirectorate #EDRaid #TamilNaduNews #BreakingNews #CorruptionCase #Justice #MoneyLaundering #TNPolitics #டாஸ்மாக் #ஊழல்வழக்கு #அமலாக்கத்துறை #உச்சநீதிமன்றம்
🔴 டாஸ்மாக் ஊழல் வழக்கு: ஆகாஷ் பாஸ்கரனிடம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி! – Global Tamil News
7