6
யாழில். போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்.நகரை அண்மித்த பகுதிகளில் இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 03கிராம் 130 மில்லி கிராம் மற்றும் 06 கிராம் 510 மில்லி கிராம் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.