தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த நல்லூர் பிரதேச சபை விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தைப்பொங்கல் வியாபாரத்திற்காக திருநெல்வேலி சந்தியில் மக்கள் பெருமளவில் கூடுவதால், நாளை புதன்கிழமை (ஜனவரி 14, 2026) ஒரு நாள் மட்டும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படும் என தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் ஆடியபாதம் வீதியில் இராமசாமிப் பரியாரியார் சந்தியில் இருந்து திருநெல்வேலிச் சந்தி நோக்கி கனரக வாகனங்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வீதி ஒருவழிப் பாதையாக (One-Way) மாற்றப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை புதன்கிழமை ஒரு நாள் மாத்திரமே அமுலில் இருக்கும். பொங்கல் பொருட்களைக் கொள்வனவு செய்ய வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் சீராகச் செல்வதற்கும் இந்தத் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Tag Words: #JaffnaTraffic #ThirunelveliJunction #ThaiPongal2026 #NallurPradeshiyaSabha #TrafficAlert #JaffnaNews #FestiveSeason #RoadSafety #NorthernProvince
🚦 பொங்கலை முன்னிட்டு திருநெல்வேலியில் போக்குவரத்து மாற்றம் – Global Tamil News
10