7
கொழும்பில் பெண்ணொருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த நபர் துப்பாக்கி உள்ளிட்ட வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் மீது கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி வாள் வெட்டு தாக்குல் மேற்கொள்ளப்பட்டது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் தேடி வந்த நிலையில் சுமார் இரு மாத கால பகுதிக்கு பின்னர் , மாலபே பகுதியில் வைத்து நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து ரி. 56 ரக துப்பாக்கி , அதற்கான மகசீன் , 10 தோட்டாக்கள் மற்றும் வெளிநாட்டு கைக்குண்டு என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.