ஈரான் நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி தொடங்கிய மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 16-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்து உள்ளது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 544 பேர் பலியாகி இருக்க கூடும் என அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10,681 பேர் அரசால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இந்நிலையில், ஈரான் பற்றிய கேள்விக்கு பதிலளித்த வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட், ஈரான் விவகாரத்தில் அனைத்து விசயங்களும் டிரம்பின் மேஜை மீது ஆவணங்களாக வைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் ஈரான் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்துவதும் ஒன்று என்றார்.எனினும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே எப்போதும், டிரம்பின் முதல் தேர்வாக இருக்கும் என கூறினார். அவர் நேற்றே உங்கள் எல்லோரிடமும் கூறினார். நீங்கள் ஈரான் அரசின் செயல்பாடுகள் பற்றி வெளிப்படையாக கேள்விப்பட்டு வரும் விசயத்தில் இருந்து, அமெரிக்க அரசுக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்து வரும் விசயங்கள் முற்றிலும் வேறானவை.அவற்றை வெளியிட டிரம்ப் ஆர்வத்துடன் இருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன் என்றார். எனினும், தேவைப்பட்டால் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள டிரம்ப் பயப்படமாட்டார் என்றும் அவர் கூறினார்.
ஈரான் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தலாம்: வெள்ளை மாளிகை
4