🤝 இலங்கையை மீளமைக்க லண்டன் தொழிலதிபரின் பெரும் பங்களிப்பு: – Global Tamil News

by ilankai

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையை  மீட்டெடுக்கும் நோக்கில், லண்டனைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வேலுப்பிள்ளை சிவசுந்தரம் 10 மில்லியன் ரூபாய் (Rs. 10 Million) நன்கொடையை வழங்கியுள்ளார். ‘டிட்வா’ புயல் (Cyclone Ditwah) தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கவும். இலங்கையை மீளமைக்கும் நிதிக்கு (Rebuilding Sri Lanka Fund) இந்த தொகை கையளிக்கப்பட்டுள்ளது. இந்த பாரிய நன்கொடையை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திகா சனத் குமணாயக்கவிடம்  வே. சிவசுந்தரம் அவர்கள் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். பிரித்தானியாவில்  இயங்கும்  வெஸ்டர்ன் ஜூவல்லர்ஸ் (Western Jewellers) நிறுவனத்தின் நிறுவுநரான வேலுப்பிள்ளை சிவசுந்தரம்,  ஆவரங்கால் சிவசக்தி மணி மண்டபத்தின் நிறுவுநரும் என்பது குறிப்பிடத்தக்கது. புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும், இலங்கை நெருக்கடிகளை எதிர்கொள்ளம் போது   இவர் போன்று பல புலம்பெயர் தமிழர்கள் உதவிகளை மேற்கொள்வது போற்றத்தக்கது. 🏛️✨ #SriLanka #RebuildingSriLanka #CycloneDitwah #HumanitarianAid #LondonTamil #WesternJewellers #Philanthropy #SivaSivanthiram #SriLankaNews #CommunitySupport #RebuildSL #HelpingHands #lka

Related Posts