புத்தளம் – முந்தல் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட நவடான்குளம் பகுதியில் இன்று இன்று (12-01-2026) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனா். இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நீர்கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த கார் ஒன்றும், கொழும்பை நோக்கிப் பயணித்த வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள மூவாில் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் அடங்குவர். விபத்தில் சிக்கிய ஏனையோர் பலத்த காயங்களுடன் புத்தளம் மற்றும் முந்தல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிக வேகம் அல்லது சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என காவல்துறையினா் சந்தேகிக்கின்றனர். விபத்தின் போது இரண்டு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன. மேலதிக விசாரணைகளை முந்தல் காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர். Tag Words: #MundalAccident #PuttalamNews #RoadSafety #SriLankaAccidents #BreakingNewsSL #Navadankulam #TrafficAlert #SafetyFirst
🚨 புத்தளம் – முந்தலில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு – Global Tamil News
4