யாழ்ப்பாணத்திலிருந்து உற்பத்திப் பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இன்று ஜனவரி 12, 2026 (திங்கட்கிழமை) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட ஆகியோா் இந்த சந்திப்பில் பங்கு பற்றியிருந்தனா் தற்போது வடபகுதி உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் மற்றும் தீர்வுகளை ஆளுநர் இச்சந்திப்பில் முன்வைத்தார். மூன்றாம் தரப்பினரை நம்பியிருப்பதால் விவசாயிகளுக்குக் குறைந்த இலாபமே கிடைக்கிறது. உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களைத் தாங்களே நேரடியாக ஏற்றுமதி செய்யலாம். கொழும்பு வரை கொண்டு சென்று ஏற்றுமதி செய்வதால் போக்குவரத்து மற்றும் நிர்வாகச் செலவு அதிகம். யாழ்ப்பாணத்திலேயே சுங்கப் பரிசோதனை மற்றும் ஆவணப் பணிகளைப் பூர்த்தி செய்தால் காலதாமதம் தவிா்க்கப்படும். அழிந்துபோகக்கூடிய பொருட்கள் (Perishables) நீண்ட நேரக் காத்திருப்பால் சேதமடைகின்றன என சுட்டிக்காட்டப்பட்டது இந்தத் திட்டத்துக்குக் கொள்கையளவில் நாம் இணக்கத்தை வெளியிடுகின்றோம் எனத் தொிவித்த சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தற்போதுள்ள சில நடைமுறைச் சிக்கல்களைத் துரிதமாகத் தீர்த்து, வெகு விரைவில் யாழ்ப்பாணத்திலிருந்து நேரடி ஏற்றுமதிக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்போம் என தொிவித்துள்ளாா். யாழ்ப்பாணம் மற்றும் பலாலி பகுதிகளில் சுங்க அதிகாரிகளுக்கான தங்குமிட வசதிகள் மற்றும் மேலதிக அலுவலகங்களை அமைப்பதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது Tag Words:#JaffnaExports #NorthernProvince #SriLankaCustoms #EconomicGrowth #FarmerProfit #DirectTrade #KKT #Palali #Vedanayagan #SriLankaEconomy2026
🚢 வடக்கின் பொருளாதார எழுச்சி – யாழ்ப்பாணத்திலிருந்து நேரடி ஏற்றுமதி – Global Tamil News
2