மதுரோவை மட்டும் அல்ல, ஜெரோம் பவலையும் மிரட்டும் அமெரிக்க சண்டியர்! அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் மீதான விசாரணை: அரசியல் அழுத்தமா? by admin January 12, 2026 written by admin January 12, 2026 அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் (Fed) தலைவர் ஜெரோம் பவல் மீது தற்போது ஒரு குற்றவியல் விசாரணை (Criminal Probe) தொடங்கப்பட்டுள்ளது. இதனை அவர் உறுதிசெய்துள்ளார். ஃபெடரல் ரிசர்வ் தலைமையகத்தின் $2.5 பில்லியன் மதிப்பிலான புனரமைப்பு (Renovation) பணிகள் குறித்து கடந்த ஜூன் மாதம் அவர் அளித்த சாட்சியத்தில் தவறான தகவல்கள் இருந்ததாகக் கூறி, அமெரிக்க நீதித்துறை (DOJ) இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது. எனினும் ஜெரோம் பவல் அளித்த விளக்கத்தில் “இந்த விசாரணை தனது சாட்சியம் அல்லது கட்டிடப் புனரமைப்பு பற்றியது அல்ல; மாறாக இது ஒரு சாக்குப்போக்கு (Pretext)” என்று தெரிவித்துள்ளார். உண்மையில் வட்டி விகிதங்களைக் குறைக்கச் சொல்லி ஜனாதிபதி டிரம் தரப்பிலிருந்து வரும் அரசியல் அழுத்தங்களுக்கு பணியாததால், பழிவாங்கும் நோக்குடன் இந்த விசாரணை நடத்தப்படுவதாக அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதே ஃபெடரல் ரிசர்வின் உண்மையான கடமை என்றும், அரசியல் மிரட்டல்களுக்குப் பயந்து முடிவுகளை மாற்றப்போவதில்லை என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார். அமெரிக்க வரலாற்றில் மத்திய வங்கித் தலைவர் ஒருவர் மீது இத்தகைய குற்றவியல் விசாரணை நடத்தப்படுவது இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது. இது ஃபெடரல் ரிசர்வின் சுதந்திரமான செயல்பாட்டிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக முதலீட்டாளர்களால் பார்க்கப்படுகிறது. இதற்குத்தான் ஆசைப்பட்டீரோ அமெரிக்க மக்களே?
மதுரோவை மட்டும் அல்ல, ஜெரோம் பவலையும் மிரட்டும் அமெரிக்க சண்டியர்! – Global Tamil News
4
previous post