மன்னார் நகரின் முக்கிய வீதியான தபாலகம் – செத்பார் வீதி நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்டு, தற்போது ஜனாதிபதியின் வருகைக்காக அவசர அவசரமாகச் சீரமைக்கப்படுவது அப்பகுதி மக்களிடையே பெரும் விமர்சனத்தையும், அதேவேளை ஒருவித நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது. மன்னார் பிரதான தபாலகத்தில் இருந்து சௌத்பார் புகையிரத நிலையப் பகுதிக்குச் செல்லும் பிரதான வீதி, பல வருடங்களாகக் குன்றும் குழியுமாக இருந்த நிலையில், தற்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் வருகையையொட்டிப் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. எதிா்வரும்ஜனவரி 15, வியாழக்கிழமை (2026) ஜனாதிபதியின் வருகையின் நோக்கம் காற்றாலை மின் கோபுரத் திறப்பு விழா மற்றும் புதிய கோபுரங்களுக்கு அடிக்கல் நாட்டுதலாகும். இந்தநிலையில் வீதிக் குழிகளை நிரப்பி செப்பனிடும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மழைக்காலங்களில் குளம் போல் காட்சியளிக்கும் இந்த வீதியைப் புனரமைக்கக் கோரி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாதாரண மக்களின் அன்றாடத் துயரங்களைக் கண்டுகொள்ளாத திணைக்களங்கள், ஒரு நாட்டின் தலைவர் வரும்போது மட்டும் இவ்வளவு வேகமாகச் செயற்படுவது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது ஒரு முழுமையான தார் வீதி அபிவிருத்தியாக அமையாமல், ஜனாதிபதியின் வாகனப் பேரணி தடையின்றிச் செல்வதற்கான ‘குழி நிரப்பும்’ பணியாக மட்டுமே இருப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்
நீண்ட காலமாக கேட்பாாின்றி காணப்பட்ட வீதிகள் ஜனாதிபதியின் வருகைக்காக அவசரமாக செப்பனிடப்படுகின்றன – Global Tamil News
2
previous post