🚨 அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு –  6 பேர் பலி – இளைஞர் கைது – Global Tamil News

by ilankai

அமெரிக்காவின் மிசிசிப்பி (Mississippi) மாநிலத்தில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 24 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிசிசிப்பியின் கிளே கவுண்டி (Clay County) பகுதியில் உள்ள மூன்று வெவ்வேறு இடங்களில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடா்பில் 24 வயதான டாரிக்கா எம். மூர் (Daricka M. Moore) என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர்கள் சந்தேக நபரின் தந்தை, கிளென் மூர் (67 வயது). , அவரது சகோதரர், குயின்டன் மூர் (33 வயது). அவரது மாமா, வில்லி எட் கைன்ஸ் (55 வயது). சந்தேக நபரின் உறவினரான 7 வயது சிறுமி., உள்ளூர் திருச்சபை போதகர் ரெவ. பாரி பிராட்லி. போதகரின் சகோதரர் சாமுவேல் பிராட்லி ஆவா் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையின்படி, டாரிக்கா முதலில் தனது தந்தை, சகோதரர் மற்றும் மாமாவை அவர்களது இல்லத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர் தனது சகோதரரின் வாகனத்தைத் திருடிக்கொண்டு வேறொரு இடத்திற்குச் சென்று, அங்கு தனது 7 வயது உறவுக்காரச் சிறுமியைச் சுட்டுக் கொன்றுள்ளார். இறுதியாக, ஒரு தேவாலயத்திற்கு அருகில் இருந்த போதகரையும் அவரது சகோதரரையும் கொன்றுவிட்டுத் தப்ப முயன்றுள்ளார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 11:24 மணியளவில் காவல்துறையின் வீதித் தடையின் போது டாரிக்கா கைது செய்யப்பட்டார். அவர் மீது முதற்கட்டமாக முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய ‘கேபிடல் மர்டர்’ (Capital Murder) குற்றச்சாட்டாக உயர்த்தப்படும் என மாவட்ட வழக்கறிஞர் ஸ்காட் கோலோம் தெரிவித்துள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. Tag Words: #MississippiShooting #ClayCounty #WestPointMS #BreakingNewsUS #GunViolence #DarickaMoore #JusticeForVictims #Tragedy2026

Related Posts