🕊️ பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை விபத்து -காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா். யாழ். போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார். யாழ் கொட்டடியைச் சோ்ந்த 23 வயதான சிவராசா சிவலக்சன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு புகையிரதத்துடன் (Luxury Train), அரியாலை 13 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முயன்ற போதே இவரது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த கடவை நீண்டகாலமாகப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வருகிறது. இங்கு அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறுவதால், பாதுகாப்புக் கதவுகளை (Gates) அமைக்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு இளம் உயிர் பறிபோயுள்ள நிலையில், இனியாவது அரசாங்கமும் புகையிரத திணைக்களமும் விழித்துக்கொண்டு இந்தப் பகுதியைத் தரமான புகையிரத கடவையாக மாற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். Tag Words: #Jaffna #TrainAccident #Ariyalai #JusticeForSivalakshan #SafeRailways #JaffnaTeachingHospital #SriLankaRailways #BreakingNewsTamil

Related Posts