யாழில். நிலவிய சீரற்ற கால நிலை – கடல் கொந்தளிப்பால் மூர்க்கம் கடற்கரை பாதிப்பு

by ilankai

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை கடற்கொந்தளிப்பு காரணமாக பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை தும்பளை கிழக்கு பகுதியில் உள்ள மூர்க்கம் கடற்கரையில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, கொங்றீட் வீதி, சீமெந்து இருக்கைகள், நடைபாதை உள்ளிட்ட நிரந்தர கட்டுமானங்கள் அத்தனையும் கடற்கொந்தளிப்பில் அள்ளுண்டு போய் அழிவடைந்துள்ளன.அது தொடர்பில் பருத்தித்துறை நகர சபை நகரபிதா  வின்சென் டீ போல் டக்ளஸ் போல் சம்பவ இடத்திற்கு சென்று நிலமைகளை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் திணைக்கள பொதிப்பதிகாரிகளுக்கு அது தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தார். 

Related Posts