🏛️ தைப்பொங்கலுக்கு  யாழ் செல்லும் ஜனாதிபதி    – Global Tamil News

by ilankai

தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவுள்ளார். ஜனவரி 15 தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ஆலய வழிபாடுகளிலும் மக்கள் சந்திப்புகளிலும் ஈடுபடுவார்.  பிற்பகல் 2மணிக்கு வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவில்தைப்பொங்கல் விழா மற்றும் சிறப்பு வழிபாட்டிலும் மாலை 4மணிக்கு மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்விலும் கலந்து கொள்ளவாா். ஜனவரி 16ம் திகதி இரண்டாம் நாள் சமூக மேம்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு சார்ந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது. முற்பகல் 9மணிக்கு மீசாலை ஆரம்ப பாடசாலைவீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் அவா் பிற்பகல் 2மணிக்கு கொக்குவில் தொழிநுட்ப கல்லூரி மைதானத்தில் நடைபெறும் முழு நாடும் ஒன்றாக..” – போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளாா். முக்கிய நிகழ்வாக வடக்கு மாகாணத்தில் வீடற்ற குடும்பங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்ட நிதியை ஜனாதிபதி நேரடியாகப் பயனாளிகளுக்கு வழங்கவுள்ளார். மேலும் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் “முழு நாடும் ஒன்றாக” (A Nation United) என்ற போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் ஒரு அங்கமாக, யாழ்ப்பாண இளையோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த மாபெரும் பேரணி மற்றும் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. Tag Words: #AKDJaffnaVisit #ThaiPongal2026 #JaffnaNews #AnuraKumaraDissanayake #DrugFreeSriLanka #Meesalai #Kokuvil #NorthernProvince #SriLankaPolitics

Related Posts