முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வற்றாப்பளை தெற்கு (G.N Division) கிராம அலுவலர் பிரிவில் உள்ள உள்ளக வீதிகள் நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள், மாணவர்கள் மற்றும் முதியவர்கள் அன்றாடப் போக்குவரத்தின் போது பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகளையும் அழைப்பையும் ஏற்று, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (11.01.2026) குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று வீதிகளின் தற்போதைய நிலவரங்களை நேரில் பார்வையிட்டார். ஆய்வின் போது, குறிப்பாக பின்வரும் வீதிகள் போக்குவரத்திற்குத் தகுதியற்ற நிலையில் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது: பள்ள வெளி – 01 ஆம் குறுக்கு வீதி பள்ள வெளி – 04 ஆம் குறுக்கு வீதி பள்ள வெளி – 05 ஆம் குறுக்கு வீதி சேதமடைந்த வீதிகளால் மழைக் காலங்களில் நீர் தேங்கி நிற்பதுடன், அவசரத் தேவைகளுக்காக வாகனங்களைக்கூட உள்ளே கொண்டு வர முடியாத நிலை காணப்படுவதாக மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கவலை தெரிவித்தனர். நிலைமைகளை நேரில் அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர், இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, வீதிகளைச் சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தார். மேலும், இது குறித்த கோரிக்கைகளை எழுத்து மூலமாகச் சமர்ப்பிக்குமாறும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
வற்றாப்பளையில் சிதைந்துபோயுள்ள வீதிகள்: மக்கள் அவதி – நேரில் சென்று ஆராய்ந்தார் ரவிகரன்! – Global Tamil News
2