அருச்சுனாவிடம் அனுரவின் துப்பாக்கி

by ilankai

அனுர அரசிடம் தான் கைத்துப்பாக்கி பெற்றுக்கொண்டதாக தனது முகநூலில் ஏற்றுக்கொண்டுள்ளார் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன். தன் இனத்திற்காக தன்னை இழப்பதற்கு தயாராக இல்லாதவனால் ஒரு இனத்தின் வழிகாட்டியாக மாற முடியாது. இது எங்களுக்கு காலம் சொல்லித் தந்த பாடம்! தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளத் தெரியாதவன் தன் இனத்தையும் பாதுகாக்க போவதில்லை. நீங்கள் கேட்கின்ற சகல கேள்விகளுக்கும் உரிய ஒரே ஒரு பதில். ஆம் அரசாங்கம் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு பாதுகாப்பு தர மறுத்திருக்கிறது. ஆதலால் என்னை நானே பாதுகாப்பதற்காக அரசாங்கம் அனுமதி அளிக்கப்பட்ட துப்பாக்கியை தந்திருக்கிறது. வேறு ஏதாவது கேள்விகள் இருக்கிறதா? ஏன முகநூலில் பதிவிட்டுள்ளார் அருச்சுனா.

Related Posts