கைத்தொலைபேசி களவாடி பிடிபட்டவனும் திருட்டு உறவிற்காக மதில் பாய்ந்தவர்களுமே தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் என குற்றஞ்சாட்டியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன்.இதனிடையே எவ்வாறு ஒழுக்கமாக செயற்பட வேண்டும் என்று அர்ச்சுனா இராமநாதன் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். வடக்கு மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் இவரை தெரிவு செய்தார்கள் ஆனால் இன்று அந்த மக்களின் எதிர்பார்ப்பு வீண்டிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் கூச்சலிடுவதும்,சிற்றுண்டி சாலைக்கு சென்று சாப்பிடுவதும் மாத்திரம் பணி அல்ல என்பதை அர்ச்சுனா இராமநாதன் விளங்கிக் கொள்ள வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.இதனிடையே கைத்தொலைபேசி களவாடி குற்றச்சாட்டினில் வழக்கினை தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் எதிர்கொண்டுள்ளார்.அதேவேளை மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான ரஜீவன் திருட்டு உறவிற்காக மதில் பாய்ந்தவரென தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நாடாளுமன்றில் வைத்து குற்றஞ்சாட்டியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன்.
கைத்தொலைபேசி களவாடிய பொழுதுகளில்!
3
previous post