கல்னேவ பிரதேச செயலகப் பிரிவின், மல்பெலிகல, அலுபத்த கிராமத்தில் இன்று (09) முற்பகல் நடைபெற்ற ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ், அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க கலந்து கொண்டார். மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ் உள்ள பிரதான வேலைத்திட்டமாக இந்த வீடுகளை நிர்மாணிக்கும் PROJECT 5M வேலைத்திட்டத்தை விரைவாக ஆரம்பிக்க முடிந்ததில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் அதே இடத்தில் வீடுகளை நிர்மாணிக்க முடியும் என்று தர உத்தரவாதம் அளிக்கப்பட்ட அனுராதபுர மாவட்டத்தின் கல்னேவ, பலாகல, பலுகஸ்வெவ, இபலோகம மற்றும் திரப்பனே ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில், முழுமையாக சேதமடைந்த 26 வீடுகளுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஏழைக் குடும்பங்களுக்காகவும், மலையக மக்களுக்காகவும் மற்றும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்காகவும் அரசாங்கம் ஆரம்பித்துள்ள வீட்டுத் திட்டங்கள் உட்பட இந்த வீட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், இலங்கை வரலாற்றில் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் நிர்மாணிக்கப்படும் ஆண்டாக 2026 ஆம் ஆண்டு அமையவுள்ளதாக அநுரகுமார தெரிவித்துள்ளார்.
ஏழைக் குடும்பங்கள், மலையக மக்கள், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான ஆண்டாக 2026 அமையும்! – Global Tamil News
9
previous post