🎬 ஜனநாயகனுக்கு U/A சான்றிதழ்- பொங்கலன்று வெளியீடு – Global Tamil News

by ilankai

நடிகர் விஜயின் (தமிழக வெற்றிக் கழகத் தலைவர்) கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ (Jana Nayagan) தணிக்கை சிக்கல்களைத் தாண்டி தற்போது U/A சான்றிதழைப் பெற்றுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இன்று (ஜனவரி 9, 2026) வெளியாக வேண்டிய நிலையில் தள்ளிப்போனது. தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்கத் தாமதம் செய்ததை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. படத்திற்கு U/A சான்றிதழ் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். படத்தில் இடம்பெற்ற சில அரசியல் வசனங்கள் மற்றும் காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி, தணிக்கை வாரியம் அதனை மறுஆய்வுக் குழுவிற்கு (Revising Committee) அனுப்பியிருந்தது. இதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு இன்று கிடைத்துள்ளதால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் திகதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 3 மணிநேரம் 6 நிமிடங்கள் ஓடக்கூடிய இப் படத்தின் பின்னணிஇசையை இயக்குநர்: எச். வினோத்தும் படத்திற்கான இசை:யைஅனிருத் ரவிச்சந்தரும் மேற்கொண்டுள்ளனா். விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி ஆகியோா் இப்படத்தில் நடித்து்ளனா். ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி, மக்களின் நலனுக்காக அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராடும் அரசியல் ஆக்ஷன் திரைப்படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. Tag Words: #JanaNayagan #Vijay #Thalapathy69 #TVK #HVinoth #CensorCertificate #UACertificate #TamilCinema2026 #PongalRelease

Related Posts