அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் டேமியன் மார்ட்டின் (Damien Martyn) உடல்நலக்குறைவு காரணமாக கோமா நிலையில் இருந்து மீண்டு அவர் தற்போது வீடு திரும்பியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த டேமியன் மார்ட்டின், தற்போது அபாயக் கட்டத்தைத் தாண்டி நலமுடன் வீடு திரும்பியுள்ளார். திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் மற்றும் இதயம் தொடர்பான சிக்கல்கள் காரணமாக அவர் கோமா நிலைக்குச் சென்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் கண் விழித்ததுடன், சிகிச்சைகளுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். தற்போது மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் ஓய்வெடுப்பதற்காக வீடு திரும்பியுள்ளார். 2003 உலகக்கோப்பை நாயகர்களில் ஒருவரான மார்ட்டின் உடல்நிலை குறித்து உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கவலை தெரிவித்திருந்த நிலையில், இந்த செய்தி பெரும் நிம்மதியை அளித்துள்ளது. முன்னாள் சக வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியங்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றன. மார்ட்டின் தனது ஸ்டைலான துடுப்பாட்டத்துக்கு பெயர் பெற்றவர். அவுஸ்திரேலிய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, பல வரலாற்று வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். குறிப்பாக இந்தியாவிற்கு எதிரான தொடர்களில் இவரது ஆட்டம் எப்போதும் பேசப்படும். Tag Words: #DamienMartyn #CricketLegend #AustraliaCricket #Recovery #HealthUpdate #DamienMartynNews #CricketWorld #WelcomeBack
🏏 கோமாவிலிருந்து மீண்ட டேமியன் மார்ட்டின் – Global Tamil News
6
previous post