வெனிசுலாவில் கடந்த சனிக்கிழமை அமெரிக்கா நடத்திய அதிரடி ராணுவத் தாக்குதல் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதலில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டதாக வெனிசுலாவின் உள்துறை அமைச்சர் தியோஸ்டாடோ கபெல்லோ (Diosdado Cabello) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். கொல்லப்பட்டவர்களில் 23 ராணுவ வீரர்களின் பெயர்ப்பட்டியலை வெனிசுலா ராணுவம் வெளியிட்டுள்ளது. மேலும், வெனிசுலாவுக்கு ஆதரவாக இருந்த 32 கியூபா ராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகளும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கியூபா உறுதிப்படுத்தியுள்ளது. அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிக்கோலஸ் மதுரோவின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி சிலியா புளோரஸ் (Cilia Flores) தலையில் காயமடைந்த நிலையில் அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். தற்காலிக அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez), கொல்லப்பட்ட வீரர்களின் நினைவாக நாடு முழுவதும் ஒரு வார கால துக்க தினத்தை அறிவித்துள்ளார். வெனிசுலா மீதான இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா ‘Operation Resolve’ எனப் பெயரிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் புகாரின் பேரில் மதுரோ கைது செய்யப்பட்டு தற்போது நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் இந்த தன்னிச்சையான ராணுவ நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. #Venezuela #BreakingNews #USAttack #NicolasMaduro #SriLankaPolitics #HarshaDeSilva #GlobalNews #CurrentAffairs #TamilNews #InternationalSecurity
🌎 வெனிசுலா பதற்றம்: அமெரிக்க தாக்குதலில் 100 பேர் பலி ஒரு வார துக்க தினம் அறிவிப்பு! – Global Tamil News
7