இலங்கையின் பல மாவட்டங்களில் நிலவும் கடும் மழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களம் அவசர வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகள் மற்றும் குளங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 📝 அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்: கிழக்கு மாகாணம்: அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை. வடக்கு மாகாணம்: யாழ்ப்பாணம், வவுனியா. வடமத்திய மாகாணம்: பொலன்னறுவை, அனுராதபுரம். இந்தநிலையில் ஆறுகள் மற்றும் குளங்களுக்கு அருகில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து தற்காத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அத்துடன் வெள்ளம் தேங்கக்கூடிய வீதிகள் மற்றும் பாலங்களைப் பயன்படுத்துவதை அவசரத் தேவையின்றி தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளனா். பெரிய ஆறுகளான மகாவலி கங்கை, மல்வத்து ஓயா மற்றும் யா ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் அபாயக் கட்டத்தை எட்டி வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்நிலை முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. அணைக்கட்டுகளின் வான்கதவுகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர். Tag Words: #FloodAlertSL #SriLankaWeather #IrrigationDepartment #Monsoon2026 #SafetyFirst #JaffnaFlood #Batticaloa #Anuradhapura #EmergencyUpdate
🌊 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை – Global Tamil News
5