இலங்கையில் இயற்கை பேரனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கண்டி – உடுதும்புர பகுதியில் இன்று (8) மாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும் பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் அறிவுறுத்தியுள்ளதுஇதனிடையே தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 650 மில்லிமீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என எச்சரித்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, இதன் தாக்கம் யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் கருத்து வெளியிடுகையில் உருவாகியுள்ள தாழ்வுமண்டலமானது, நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரவுள்ளது.அதனால் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றதென தெரிவித்துள்ளார்.இதனிடையே இன்றிரவு கிழக்கில் பாரிய அபாய எச்சரிக்கை இன்றிரவு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நில அதிர்ச்சி
7
previous post