⚖️ ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு அமுலாக்கத்துறை  மீண்டும் அழைப்பாணை: – Global Tamil News

by ilankai

பொலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு (Raj Kundra) அமுலாக்கத்துறை (Enforcement Directorate – ED) மீண்டும் அழைப்பாணை (Summons) அனுப்பியுள்ளது. பிட்கொயின் (Bitcoin) தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணைக்காக அவர் நேரில் முன்னிலையாகுமாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு அமித் பரத்வாஜ் என்பவர் மூலம் நடத்தப்பட்ட 6,600 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்கொயின் மோசடி வழக்கில் ராஜ் குந்த்ராவின் பெயர் அடிபட்டது. கடந்த ஆண்டு, இந்த வழக்கின் ஒரு பகுதியாக ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான சுமார் 97.79 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை (ஜுஹு பகுதியிலுள்ள பங்களா உட்பட) அமுலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியிருந்தது. மேலும் உக்ரைனில் பிட்கொயின் சுரங்கம் (Mining farm) அமைப்பதற்காக ராஜ் குந்த்ராவுக்கு 285 பிட்கொயின்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் தற்போதைய மதிப்பு சுமார் 150 கோடி ரூபாய்க்கும் அதிகம். எனினும் ராஜ் குந்த்ராவினால் , தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், இந்த வழக்கில் தான் ஒரு சாட்சியாகவே பார்க்கப்படுவதாகவும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. ராஜ் குந்த்ரா ஏற்கனவே ஆபாசப் பட தயாரிப்பு வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் பழைய பிட்கொயின் வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளதால், அவர் மும்பையிலுள்ள அமுலாக்கத்துறை அலுவலகத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதேவேளை இந்த பிட்கொயின் பணமோசடி வழக்கில் ஷில்பா ஷெட்டிக்கும் நேரடித் தொடர்பு உள்ளதாக அமுலாக்கத்துறை (ED) கருதுகிறது. குறிப்பாக, மோசடிப் பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்துக்கள் அவரது பெயரில் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்களின் (மொத்த மதிப்பு ₹97.79 கோடி எனக் கண்கிடப்பட்டுள்ளது. அமுலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் பின்வரும் சொத்துக்களைத் தற்காலிகமாக முடக்கியுள்ளது: 1. மும்பையின் விலையுயர்ந்த பகுதியான ஜூஹுவில் உள்ள ஒரு சொகுசு குடியிருப்பு. இது தற்போது நடிகை ஷில்பா ஷெட்டியின் பெயரில் உள்ளது. 2. புனே பங்களா (Pune Bungalow): மகாராஷ்டிராவின் புனே நகரில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு பங்களா. இது ராஜ் குந்த்ராவுக்குச் சொந்தமானது. 3. ராஜ் குந்த்ராவின் பெயரில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் மற்றும் முதலீடுகள். சொத்து உரிமையாளர்  மோசடி மூலம் ஈட்டப்பட்ட வருவாயைக் கொண்டு ஷில்பா ஷெட்டியின் பெயரில் ஜூஹுவில் உள்ள வீடு வாங்கப்பட்டதாக அமுலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. சட்டப்படி, குற்றச் செயல்கள் மூலம் கிடைக்கும் பணத்தில் வாங்கப்படும் சொத்துக்கள் யாருடைய பெயரில் இருந்தாலும் அவற்றை முடக்க அதிகாரம் உண்டு. இது தவிர, 2025 ஓகஸ்ட் மாதத்தில் மற்றுமொரு தொழிலதிபர் அளித்த புகாரில், ஷில்பா ஷெட்டியும் ராஜ் குந்த்ராவும் இணைந்து ₹60.4 கோடி மோசடி செய்ததாக மும்பை காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் ஷில்பா ஷெட்டி ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருந்தபோது இந்தக் கடன் வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ராஜ் குந்த்ராவிடம் தற்போது சுமார் 285 பிட்கொயின்கள் உள்ளதாக ED மதிப்பிட்டுள்ளது. இதன் இன்றைய சந்தை மதிப்பு சுமார் ₹150 கோடிக்கும் அதிகம். இந்த பிட்கொன்கள் உக்ரைனில் முதலீடு செய்வதற்காகப் பெறப்பட்டவை, ஆனால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படாததால் அவை இன்னும் குந்த்ராவிடமே இருப்பதாகக் கூறப்படுகிறது. Tag Words: #RajKundra #ShilpaShetty #EDSummons #BitcoinScam #MoneyLaundering #BollywoodNews #MumbaiCrime #BreakingNewsIndia

Related Posts