வென்னப்புவ பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மற்றுமொரு பெண் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வென்னப்புவ, தம்பிரவில பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஏற்கனவே ஒரு பெண் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது விநியோகஸ்தராகச் செயல்பட்ட மற்றொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தன்கொட்டுவ தெற்கு, கோனுவில பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 64 வயதுடைய பெண்ணே கள்ளச்சாராயத்தைத் தயாரித்த பிரதான குற்றவாளி எனக் கூறப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள 44 வயதுப் பெண், அவரிடமிருந்து சாராயத்தைப் பெற்று பொதுமக்களுக்கு விநியோகித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கள்ளச்சாராயம் அருந்தியதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 5 பேரின் சடலங்கள் மீதான பிரேதப் பரிசோதனைகள் இன்று (ஜனவரி 7, 2026) நடைபெறவுள்ளன. பலியானவர்கள் 29 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். தம்பிரவில பகுதியில் உள்ள ஒரு மதுபானக் கடையின் உட்புறத்திலும், அதன் அருகாமையிலும் சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினா் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். Tag Words: #Wennappuwa #IllicitLiquor #SriLankaNews #Dankotuwa #CrimeNewsTamil #PoliceArrest #PublicHealthSafety #BreakingNewsSL
🚨 வென்னப்புவ கள்ளச்சாராய மரணங்கள் – மற்றுமொரு பெண் கைது – Global Tamil News
6