இலங்கையின் மிக நீண்ட நதியான மகாவலி ஆறு மீண்டும் பெருக்கெடுத்துள்ளதால், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் மத்திய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அபாயகரமான நிலையை அடைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் பல இடங்களில் வெகுவாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கங்கையின் கீழ்ப்பகுதிகளான பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் வெள்ள அபாயம் அதிகம். மகாவலி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள விக்டோரியா, ரந்தெனிவளை, கொத்மலை போன்ற பிரதான நீர்த்தேக்கங்களில் இருந்து அதிகளவிலான நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், ஆற்றின் வெள்ளப் பெருக்கு மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் மகாவலி ஆற்றின் இரு கரையோரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre – DMC) கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் வாகனப் போக்குவரத்தைத் தவிர்க்குமாறு காவல்துறைியனா் அறிவுறுத்தியுள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதால், அவசரகால விளக்குகள் மற்றும் தொலைபேசி சார்ஜர்களைத் தயாராக வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட செயலகங்கள், முப்படையினர் மற்றும் காவல்துறையினா் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயார் நிலையில் உள்ளனர். தேவையான இடங்களில் தற்காலிக முகாம்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. Tag Words: #MahaweliRiver #SriLankaFloods #FloodAlert #DMC #Polonnaruwa #Trincomalee #DisasterManagement #HeavyRain #BreakingNewsSL
🌊 மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அபாயகரமான நிலையை அடைந்துள்ளது. – Global Tamil News
4