இலங்கையில் புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வெளியிடப்பட்ட தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள குளறுபடிகளை முன்னிறுத்தி, கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது. தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் மொழிநடை மற்றும் உள்ளடக்கத்தில் பாரிய தவறுகள் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் பதவி வகிப்பதால், இந்தத் தவறுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணையில் கையெழுத்திடும் பணிகள் இன்று புதன்கிழமை (ஜனவரி 07, 2026) ஆரம்பமாகி இந்த வார இறுதிக்குள் சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளது. புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், பிரதமருக்கு எதிராகக் கொண்டு வரப்படும் முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை இதுவாகும். எனினும், அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் இந்தப் பிரேரணையின் வெற்றி வாய்ப்பு குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. Tag Words: #HariniAmarasuriya #NoConfidenceMotion #SajithPremadasa #SriLankaPolitics #EducationReform #Grade6Textbook #SJB #BreakingNewsSL #TamilNews
⚖️ பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – Global Tamil News
6