இலங்கையில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.அதன் தாக்கம் யாழ் மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் கடந்து சென்ற தாழ்வு மண்டலங்கள் விட இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது இதன் நகர்வும் பாதை கடல் பகுதியாக இருந்தாலும். வடக்கு நோக்கி நகரும் போது தரையையும் ஊடறுத்துச் செல்லவுள்ளது. அத்துடன் யாழ் மாவட்டம் மிக அதிக மழைவீழ்ச்சியை எதிர்கொள்ள உள்ளது. இதன் தாக்கம் டிட்வா புயலால் தென்பகுதி எதிர்கொண்ட பேரழிவுகளை விட அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்க முடிகிறது.காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை தவிர்க்கப்பட வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு எச்சரிக்கை!
7