யாழில். கைதான இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

by ilankai

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 27ஆம் , 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட  குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் கைதாகி இருந்தனர். கைதான மீனவர்கள் இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் , இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 23 பேரினதும் விளக்கமறியலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் மன்று நீடித்துள்ளது . 

Related Posts