நுவரெலியாவில் ஏரிக்குள் விழுந்த விமானம் – விமானிகள் காயம்

by ilankai

நுவரெலியா, கிரெகரி ஏரியில்  நீர் விமானம் (sea flight) இன்றைய தினம் புதன்கிழமை  தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியதுஇந்த விபத்தில் அதிலிருந்த 2 விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக வந்தபோதே விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளையும், ஏரியில் படகு சவாரி செய்துகொண்டிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Related Posts