தலையாய கதிரை பிரச்சினை?

by ilankai

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றில் தனது ஆசனத்தை மாற்றுமாறு சபாநாயகரிடம் இன்று அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது தாயாரைக் கொச்சைப்படுத்தி மிக மோசமான வார்த்தைகளால் திட்டியதாக அர்ச்சுனா சபையில் தெரிவித்துள்ளார். “இனிமேலும் அவருக்கு அருகில் அமர்ந்து என்னால் சபையில் இருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.அவரது ஆசனம் மாற்றப்படாவிட்டால், சபை நடவடிக்கைகளின் போது அவருக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு தான் பொறுப்பல்ல என அர்ச்சுனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாடாளுமன்ற வரப்பிரசாதக் குழுவிலிருந்து உடனடியாக நீக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.முன்னதாக அண்மையில் நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு குழுக்கூட்டத்தில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த அருச்சுனாவை நாடாளுமன்றில் அருகாக இருக்கின்ற குரங்கை இங்கும் அமர வைத்துள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

Related Posts