வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் அமெரிக்க சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்த நிகழ்வு உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சிலியா புளோரஸின் முகத்தில் காயங்கள் மற்றும் தழும்புகள் காணப்பட்டன. அவர் தலையில் கட்டுகளுடன் காணப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிலியாவின் வழக்கறிஞர் மார்க் டோனெல்லி (Mark Donnelly), கைது நடவடிக்கையின் போது (Abduction) தனது கட்சிக்காரருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். குறிப்பாக, அவரது விலா எலும்பு (Rib) முறிந்திருக்கலாம் அல்லது பலத்த சேதமடைந்திருக்கலாம் என அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். அவருக்கு உடனடியாக எக்ஸ்ரே (X-ray) மற்றும் முழுமையான மருத்துவப் பரிசோதனைகள் வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரோ மற்றும் சிலியா மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இருப்பினும், தாங்கள் நிரபராதிகள் என இருவரும் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர். மதுரோ தன்னை ஒரு “போர்க்கைதி” (Prisoner of War) என்று அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் சர்வதேச அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் 17-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ________________________________________
காயங்களுடன் நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மதுரோவின் மனைவி சிலியா புளோரஸ்! – Global Tamil News
8