தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபையின்” மூன்றாவது அமர்வில் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டதாக ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார். போதைப்பொருளுக்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைகள், கைதுகள் மற்றும் புனர்வாழ்வு செயல்முறையின் முன்னேற்றம் ஆகியவற்றை மீளாய்வு செய்ததுடன், அதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைவரின் சேவையையும் பாராட்டியதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டபடி, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பது தொடர்பான புதிய சட்டங்களை உருவாக்கும் செயல்முறையை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பௌதீக வளர்ச்சியைப் போன்று சமூகத்தின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியதுடன், இந்த தேசிய வேலைத்திட்டத்தை பரவலாக செயல்படுத்துவதற்காக கல்வி நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கலைத்துறையில் செயற்படும் அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் ஒரு வலுவான பொறிமுறையை உருவாக்குமாறும் அறிவுறுத்தியதாக அநுர அறிவித்துள்ளார்.
தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தல் – மூன்றாவது அமர்வில் முக்கிய அறிவிப்புகள்! – Global Tamil News
9