🚨 போதைப்பொருள் குற்றச்சாட்டு: 500 காவற்துறை அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை! – Global Tamil News

by ilankai

இலங்கை காவற்துறைத் திணைக்களத்தில் உள்ள கறுப்பு ஆடுகளைக் களைந்தெடுக்கும் அதிரடி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் சிக்கிய 500 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக தற்போது ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குற்றம் நிரூபிக்கப்பட்ட மற்றும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சில அதிகாரிகள் ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இதேவேளை பாதாள உலகக் குழுக்கள், திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அநுராதபுரம் காவற்துறை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே இந்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகளே சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இதன்போது வலியுறுத்தப்பட்டது. அரசாங்கம் முன்னெடுத்துள்ள “தூய்மையான காவற்துறை சேவை” திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த நடவடிக்கைகள் பார்க்கப்படுகின்றன. போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் பொலிஸாருக்குள்ள தொடர்புகளைக் கண்டறிய விசேட புலனாய்வுப் பிரிவுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. #SriLankaPolice #DrugPrevention #Justice #SriLankaNews #PoliceDiscipline #AnandaWijepala #IGP #ZeroTolerance #LKA #CrimePrevention #இலங்கை #பொலிஸ் #செய்திகள்

Related Posts