📱 வங்கி அட்டை உங்கள் கையில் இருக்கும்போதே  உங்கள் பணம் திருடப்படுவது எப்படி? – Global Tamil News

by ilankai

உங்கள் வங்கி அட்டை உங்கள் கையில் இருக்கும்போதே, உங்கள் கணக்கில் உள்ள பணம் எவ்வாறு திருடப்படுகிறது என்பது பற்றிய விழிப்புணர்வு இன்று மிக அவசியமானது.  இந்த நுணுக்கமான மோசடி (Scam) மோசடியானது ‘Social Engineering’ எனப்படும் உளவியல் ரீதியான தந்திரத்தைப் பயன்படுத்தி நடத்தப்படுகிறது. உங்கள் வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி ஒருவர் உங்களைத் தொடர்புகொள்வார். அவர்கள் பேசும் விதம் மிகவும் நிதானமாகவும், நம்பிக்கையூட்டும் வகையிலும் இருக்கும். உங்கள் பெயர், முகவரி போன்ற ஏற்கனவே தெரிந்த தகவல்களைக் கூறி உங்களை நம்ப வைப்பார்கள். “உங்கள் கார்ட்டைப் பயன்படுத்தி பேர்மிங்காமில் £235 செலவு செய்யப்பட்டுள்ளது, இது நீங்களா?” எனக் கேட்டு உங்களைப் பதற்றமடையச் செய்வார்கள். உங்கள் கணக்கைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் உங்கள் தொலைபேசிக்கு வரும் ஒரு கோட் (Code) அல்லது நோட்டிபிகேஷனை அங்கீகரிக்குமாறு கூறுவார்கள். நீங்கள் அந்தக் குறியீட்டைச் சொல்லும் அதே வினாடியில், திருடன் தனது தொலைபேசியில் உள்ள Apple Pay அல்லது Google Pay வாலட்டில் உங்கள் கார்ட்டை இணைத்துவிடுவான். இனி அவன் உங்கள் கார்ட் இல்லாமலேயே கோடிக்கணக்கில் செலவு செய்ய முடியும். 🛡️ உங்களைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி? உங்கள் வங்கி ஒருபோதுதொலைபேசி அழைப்பின் மூலம் உங்களிடம் OTP அல்லது Approval Code கேட்காது.  பணத்தைத் திருடிவிடுவார்கள் என அவர்கள் உங்களை அவசரப்படுத்தினால், அது மோசடி என்பதற்கான முதல் அறிகுறியாகும். சந்தேகமாக இருந்தால், அழைப்பைத் துண்டித்துவிட்டு உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ எண்ணிற்கு (கார்ட்டின் பின்புறம் இருக்கும் எண்) நீங்களே அழையுங்கள்.  உங்கள் வங்கி செயலியில் புதிய சாதனங்கள் இணைக்கப்படும்போது எச்சரிக்கை வரும் வசதியை எப்போதும் ஓன் செய்து வைத்திருங்கள். Tag Words: #DigitalWalletScam #BankFraud #ApplePayScam #GooglePayFraud #CyberSecurity #ProtectYourMoney #OTPScam #LondonFinance #TamilTechNews

Related Posts