இலங்கையின் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) இன்று (ஜனவரி 5, 2026, திங்கட்கிழமை) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த ஊழல் விசாரணை தொடர்பாக, இன்று காலை FCID காரியாலயத்தில் முன்னிலையானபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ‘லங்கா சதொச’ (Lanka Sathosa) நிறுவனத்திற்குச் சொந்தமான லொரிகளை (Lorry) முறைகேடாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்குப் பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் விசாரணைக்காக முன்னிலைகுமாறு அவருக்கு காவல்துறையினா் முன்னரே அழைப்பு விடுத்திருந்தனர். அவர் முன்னிலையாகத் தவறினால், நீதிமன்றம் மூலம் பிடியாணை (Arrest Warrant) பெற்று அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் காவல்துறையினா் எச்சரித்திருந்தனர். இந்தநிலையில் இன்றையதினம் நிதி குற்றப் புலனாய்வு கிணைக்களத்தில் முன்னிலையாகிய அவா் பல மணிநேர வாக்குமூலப் பதிவுகளுக்குப் பிறகு, போதிய ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணைகளின் ஒரு பகுதியாக அவர் இன்று மாலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சதொச நிறுவனத்தின் வாகனங்களை அரசியல் ரீதியான மற்றும் தனிப்பட்ட வேலைகளுக்குப் பயன்படுத்தியதன் ஊடாக அரசாங்கத்தின் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான ஏனைய வழக்குகளும் இப்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளன. Tag Words: #JohnstonFernando #Arrested #FCID #LankaSathosa #SriLankaPolitics #CorruptionProbe #BreakingNewsSL #FinancialCrimes #JusticeSystem #TamilNews
⚖️ ஜோன்ஸ்டன் கைது – Global Tamil News
8