கல்வியை தொடர்ந்து வடமாகாணம் சுற்றுலாத்துறையிலும் இலங்கையின் கடைசி நிலையிலேயே இருந்துவருகின்றது.இந்நிலையில் வெளிநாட்டுச் சுற்றுலாவிகள் தமது விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கு, வடக்கு மாகாணம் மிகவும் பாதுகாப்பானதும் அமைதியானதுமான ஒரு பிரதேசமாகும். எனவே, சுற்றுலாவிகளின் வருகையை வடக்குக்குத் திருப்ப உதவுவதுடன், முதலீட்டு வாய்ப்புகளில் ரஸ்ய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதையும் ஊக்குவிக்க வேண்டும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான ரஸ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யனிடம் கோரிக்கை விடுததுள்ளார்.இலங்கைக்கான ரஸ்யத் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரை இன்று திங்கட்கிழமை (05.01.2026) மாலை, ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.பல தசாப்தங்களுக்குப் பின்னர் ரஸ்யத் தூதுவர் ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டமை மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டு ஆளுநர் அவரை வரவேற்றிருந்தார்.ருஸ்யச் சுற்றுலாவிகள் இலங்கைக்கு அதிகளவில் வருகை தருகின்றனர். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனினும், வடக்கு மாகாணத்துக்கான ரஸ்யச் சுற்றுலாவிகளின் வருகை மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு வரும் ரஸ்யப் பயணிகளை ஈர்க்கும் வகையில் வடக்கு மாகாணம் தனது சுற்றுலாத் திட்டங்களை முன்னெடுப்பது சிறப்பாக அமையும், என ரஸ்ய தூதர் கோரிக்கை விடுத்திருந்தார்.இதனிடையே இந்தியாவுடனான நேரடி விமான சேவை காரணமாக அதிகளவான இந்தியச் சுற்றுலாப் பயணிகள் வடக்கு மாகாணத்துக்கு வருகை தருகின்றனர். வடக்கு மாகாணமானது சுற்றுலாவிகள் தங்கிச் செல்வதற்கு மிகவும் பாதுகாப்பான சூழலைக் கொண்டுள்ளதென வடக்கு ஆளுநர் தெரிவித்துள்ளார்.
வடக்கு சுற்றுலா கடைசி இடம்!
10
previous post