மன்னார் பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியால பாடசாலையின் புதிய அதிபரை வரவேற்ற பாடசாலை சமூகம்! – Global Tamil News

by ilankai

மன்னார் பேசாலை பற்றிமா மத்திய மகாவித்தியால பாடசாலையின் புதிய அதிபராக நியமிக்கப்பட்ட .   யூட் ஜோசப் ஆனந்தம் குரூஸ் இன்றைய தினம் திங்கட்கிழமை (5) தனது கடமையை பொறுப்பேற்றார். -புதிய அதிபரை வரவேற்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (5) காலை பாடசாலையில் இடம் பெற்றது.இதன் போது பேண்ட் இசை வாத்தியத்துடன் பாடசாலையின் புதிய அதிபரான யூட் ஜோசப் ஆனந்தம் குரூஸ் வரவேற்கப்பட்டார். இதன் போது பாடசாலையின் மாணவர்கள்,ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள் மற்றும் பேசாலை மக்கள் இணைந்து புதிய அதிபரை வரவேற்றனர். Spread the love  பற்றிமா மத்திய மகா வித்தியாலயம்பேசாலைமன்னார்

Related Posts