பௌத்த மதத்துக்கே முன்னுரிமை – தையிட்டி விகாரையில் கைவைக்க முடியாது

by ilankai

யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்ற ஒருபோதும் இடமளியோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜானக வக்கும்புர தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,”இந்த நாட்டில் பௌத்த மதத்துக்கே முன்னுரிமை என்பது தமிழ் மக்களுக்கும், தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தெரியாதா? தையிட்டி திஸ்ஸ விகாரையில் எவரும் கைவைக்க முடியாது. அதை அகற்ற ஒருபோதும் இடமளியோம். திஸ்ஸ விகாரையைச் சுற்றியுள்ள காணிகள் விகாரைக்குச் சொந்தமானவை. அந்தக் காணிகளை அரசு விடுவிக்கக்கூடாது.அதேவேளை, தையிட்டி விகாரை விடயம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள விகாராதிபதிகள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வர வேண்டும். அவர்கள் தனிப்பட்ட ரீதியில் கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.” – என்றார்.

Related Posts