மன்னார் மறை மாவட்டத்தில் பேசாலையில் மூவியரசர் விழா இன்று (4.01.26) மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. வருடம் ஒருமுறை சிம்மாசனத்தில் இருந்து இறக்கப்படும் புதுமை மிக்க வெற்றி அன்னையின் திருச்சுரூபம் குழந்தை பேறு இல்லாத குடும்பங்களின் கையில் திரு பாலனின் திருச்சுரூபம் ஏந்த வைத்து ஆசீர்வதிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. வருடப் பிறப்புக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை திருஅவையானது மூவிரசர் பெரு விழாவை கொண்டாடி வருகிறது. இத்தினத்தில் புதுமை மிக்க மூவியரசர் பட்டினம் என அழைக்கப்படும் பேசாலை பகுதியின் பாது காவலியாம் புனித வெற்றி அன்னையின் திருச்சுரூபம் வருடத்தில் ஒரு முறை சிம்மாசனத்திலிருந்து இறக்கப்பட்டு விசேட ஆசீர் பெறும் நிகழ்வாக இது அமைந்து வருகிறது. இதன் போது மன்னார் மற்றும் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து ஆசி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பேசாலையில் மூவியரசர் விழா! – Global Tamil News
14
previous post