வேலியே பயிரை மேய்ந்த கதை?

by ilankai

இலங்கை நீதித்துறையில் மோசடிகள் நிறைந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப்பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான 350 கிராம் தங்க நகைகள் காணமல் போன சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற பதில் பதிவாளர் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற  பதில் பதிவாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இவர்களிடம் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து குறித்த நீதிபதி கைது செய்யப்பட்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.இதன் பின்னணியிலேயே மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி ஜே.பி.ஏ ரஞ்சித்குமார் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நகைத் திருட்டுச் சம்பவத்தைதொடர்ந்து  மேலதிக விசாரணைகளையடுத்தே நீதிச் சேவை ஆணைக்குழு இவரைப் பதவி நீக்கம் செய்தது. 

Related Posts