2
கேகாலையில் 14 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். கேகாலை – நூரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சிறுவன் ஒருவன் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வீட்டின் அருகே கிடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிறுவனை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.வைத்தியசாலையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் அறிக்கையிட்டதை அடுத்து, சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுவனின் தந்தையை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.