🏥  பாரதிராஜா  அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் – Global Tamil News

by ilankai

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 27, 2025 அன்று பாரதிராஜாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் (Respiratory problems) மற்றும் சோர்வு ஏற்பட்டதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் இன்று (ஜனவரி 3, 2026) அவருக்குத் திடீரென மூச்சுத்திணறல் அதிகரித்ததால், மேல் சிகிச்சைக்காக சென்னை எம்ஜிஎம் (MGM) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகின்றனர். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நுரையீரல் தொடர்பான தொற்றுகள் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயப்படும்படி ஏதுமில்லை என்றும், வழக்கமான உடல்நலப் பரிசோதனை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர் மருத்துவமனையில் இருப்பதாக அவரது தரப்பினர் முன்னதாகத் தெரிவித்தனர். இருப்பினும், தற்போது அவர் ஐசியூவில் இருப்பதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். 💔 பின்னணி: கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார். மகனின் மறைவு பாரதிராஜாவை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இதன்பின்னர் அவர் மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் சில காலம் தங்கியிருந்துவிட்டு அண்மையில்தான் சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 84 வயதான பாரதிராஜா ’16 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்தார். கிராமத்து கதைகளை மையப்படுத்தி திரைப்படங்கள் எடுத்து பெரிய ஹிட் கொடுத்த அவா் பல திரைப்படங்களில் நடித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது Tag Words: #Bharathiraja #MGMHospital #ChennaiNews #KollywoodUpdates #IyakkunarImayam #GetWellSoon #TamilCinema #HealthUpdate #BreakingNewsTamil

Related Posts