வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro) மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் ஜனவரி 3, 2026 அன்று அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதாக வெளியாகி வரும் செய்திகள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து அமெரிக்கா மற்றும் ஆதரவு நாடுகளின் நிலைப்பாடு வெளியாகி உ்ளளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மதுரோவை ஒரு “சர்வாதிகாரி” என்றும், அவர் அமெரிக்க நீதிமன்றத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரிக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். அர்ஜென்டினா போன்ற நாடுகள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளன. வெனிசுலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க இது ஒரு முக்கிய படி என்று அவை கருதுகின்றன. ரஷ்யா மற்றும் ஈரானின் கடும் கண்டனம் ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளன. இது ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது நடத்தப்பட்ட “ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு” என்றும், சர்வதேச சட்டங்களை அமெரிக்கா காலில் போட்டு மிதிப்பதாகவும் அவை குற்றம் சாட்டியுள்ளன. இந்தச் செயல் உலக அரசியலில் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. ஐரோப்பிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் கவலை ஐரோப்பிய ஒன்றியம் இந்த விவகாரத்தில் மிகவும் எச்சரிக்கையான போக்கைக் கடைப்பிடிக்கிறது. மதுரோவின் ஆட்சியை அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்றாலும், சர்வதேச விதிகள் மீறப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. அதேபோல், கொலம்பியா மற்றும் சிலி போன்ற அண்டை நாடுகள், இந்த அதிரடி நடவடிக்கையால் தென் அமெரிக்கப் பிராந்தியத்தில் போர்ச் சூழலோ அல்லது பெரும் வன்முறையோ வெடிக்கக்கூடும் என அச்சம் தெரிவித்துள்ளன. ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகள் ஐக்கிய நாடுகள் சபையில் இந்த விவகாரம் தொடர்பாக அவசரக் கூட்டங்களை நடத்த சில நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. வெனிசுலா அரசாங்கம் இதனை “ஏகாதிபத்திய கடத்தல்” என்று வர்ணித்துள்ளதுடன், தங்கள் தலைவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி சர்வதேச சமூகத்தின் உதவியை நாடியுள்ளது.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரின் கைதும் உலக எதிர்வினையும்! – Global Tamil News
18