பொரள்ளையில் மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிச் சூடு – Global Tamil News

by ilankai

கொழும்பு – பொரள்ளை சஹஸ்புர பகுதியில் காவல்துறையினா் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். இருப்பினும், காவல்துறையினாின் உத்தரவை மீறி அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாகச் சென்றுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினா் மோட்டாா் சைக்கிளின் டயர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பியோடிய மற்றைய நபர் வியாங்கொடை பகுதியில் வைத்து பின்னர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர்கள் எதற்காக காவல்துறையினரின் உத்தரவை மீறி தப்பிச் செல்ல முயன்றார்கள் என்பது குறித்து காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடம் பொரள்ளையின் சஹஸ்புர வீடமைப்புத் தொகுதிக்கு அருகாமையில் என்பதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

Related Posts