இலங்கை மின்சார சபை (CEB) மின்கட்டணத்தை அதிகரிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. மின்சார உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டு, நஷ்டத்தைத் தவிர்க்க இந்தக் கட்டண உயர்வு அவசியம் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி மற்றும் எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரித்துள்ளமை, போதிய மழையின்மை காரணமாக நீர்மின் நிலையங்களின் உற்பத்தித் திறன் குறைந்துள்ளதால், அதிக செலவு கொண்ட வெப்ப மின்நிலையங்களை (Thermal Power) அதிகம் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மின் விநியோகக் கட்டமைப்புகளைப் பராமரிப்பதற்கான உபகரணங்களின் விலை உலகச் சந்தையில் உயர்ந்துள்ளது போன்ற காரணங்கள் இதற்காக குறிப்பிடப்பட்டுள்ளன. மின்சார சபை சமர்ப்பித்துள்ள முன்மொழிவின்படி, குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் (0 – 60 அலகுகள்) நுகர்வோருக்கு அதிக சதவீத உயர்வையும், வர்த்தக ரீதியான மின் பாவனையாளர்களுக்கு மாறுபட்ட கட்டணங்களையும் விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார சபையின் இந்தக் கோரிக்கையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) உடனடியாக ஏற்றுக் கொள்ளாது இது குறித்துப் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே இறுதி முடிவை அறிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது Tag Words: #CEB #ElectricityTariff #SriLankaNews #PowerHike #PUCSL #EnergyCrisis #EconomyLK #TamilNews #ElectricityBill
⚡ மின்கட்டணத்தை உயர்த்துமாறு கோரிக்கை – Global Tamil News
4