யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமான முறையில் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டதாக நிலவும் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில், இன்றைய தினம் (ஜனவரி 02, வெள்ளிக்கிழமை) நயினாதீவு விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட பிக்குகள் தையிட்டி விகாரை பகுதிக்கு சென்று காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பாக அண்மையில் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் நயினாதீவு விகாரதிபதியை நேரில் சந்தித்து முறையிட்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே இன்றைய கள விஜயம் அமைந்துள்ளது. இன்றைய சந்திப்பின் முக்கிய அம்சமாக நயினாதீவு விகாரதிபதி தையிட்டிப் பகுதிக்குச் சென்று, அங்கு விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி மற்றும் அது தொடர்பாக உரிமை கோரும் மக்களின் எல்லைகளைப் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களுடன் விகாராதிபதி சிநேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்ட நிலையில் மக்கள் தமது உறுதிகள் மற்றும் ஆவணங்கள் குறித்து அவருக்கு விளக்கமளித்தனர். தற்போதைய விகாரை அமைந்துள்ள இடத்திற்குப் பதிலாக, முற்காலத்தில் திஸ்ஸ விகாரை இருந்ததாகக் கூறப்படும் உண்மையான இடத்தையும் அவர் பார்வையிட்டார். தனியார் காணிகளில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பகுதிகளை விடுவிப்பது குறித்தும், பௌத்த மதத் தலங்களை மத நல்லிணக்கத்திற்குப் பாதகமின்றிப் பராமரிப்பது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. சுமார் 6 ஏக்கர் அளவிலான தனியார் காணிகளை இராணுவம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தி இந்த விகாரையை அமைத்ததாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தமிழ் அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இந்தக் காணி அபகரிப்புக்கு எதிராகத் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கையின் கீழ் இத்தகைய சர்ச்சைக்குரிய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Tag Words: #JaffnaNews #ThaiyittiTissaVihara #NainativuMonk #LandRights #TamilPeople #Reconciliation #ValikamamNorth #SriLankaPolitics #ThaiyittiProtest #TamilNews
🧭 தையிட்டி விகாரைக்கு சென்ற நாகதீப விகாராதிபதி – Global Tamil News
3
previous post